ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் முதலாவதாக SYSCGAA SYSTEM ஆரம்பித்தல்

நாடளாவிய ரீதியில் அரச சேவைகளை மேலும் இலகுவாக்க அரசாங்கத்தினால்  தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்ற வேலைத்திட்டங்களில் இலத்திரனியல் பிரதேச செயலகம் (e-DS) எனும் நிகழ்சித்திட்டமும் ஒன்றாகும்.

அதனடிப்படையில், முதன்முதலாக அம்பாறை மாவட்டத்தில்  ஆலையடிவேம்பு பிரதேச  செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.வி.பபாகரன்  அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட SYSCGAA SYSTEM ஆரம்ப நிகழ்வினை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் திரு என்.எச்.எம்.சித்ரானந்த அவர்களினால் உத்தியோகபூர்வமாக சனிக்கிழமை (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு, பொதுநிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் திரு கே.ஜீ. தர்மதிலக, அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் திரு ஜே.எம்.ஏ. டக்லஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்,  திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

SYSCGAA SYSTEM இன் முக்கியத்துவம் தெளிவுபடுத்தப்பட்டதுடன், இதன்மூலம் எதிர்காலத்தில் எவ்வாறு  அரச சேவைகளை மேலும் பொதுமக்களுக்கு இலகுவாக   ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பது பற்றியும் அமைச்சின் செயலாளர் அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வானது எதிர்காலத்தில் பொதுமக்கள் சேவைகளை மேலும் இலகுவாக்க நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் மரம் நடும் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் கௌரவ அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் அவர்களால் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு எதிர்காலத்தில் மரம் நடுதலின்  முக்கியத்துவத்தையும் இது மனித வாழ்க்கையோடு எவ்வாறு இணைந்துள்ளது என்பது பற்றிய தெளிவான விளக்கங்களுடன் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், வாழ்வாதார பயனாளிக்கான விற்பனை வண்டியும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.









ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் முதலாவதாக SYSCGAA SYSTEM ஆரம்பித்தல் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் முதலாவதாக SYSCGAA SYSTEM ஆரம்பித்தல் Reviewed by Editor on February 13, 2022 Rating: 5