லொஹான் ரத்வத்தைக்கு புதிய அமைச்சு

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுகங்கள் வழங்கல் வசதிகள் இயந்திரப் படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த இன்று (10) வியாழக்கிழமை காலை நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் திரு.காமினி செனரத் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





லொஹான் ரத்வத்தைக்கு புதிய அமைச்சு லொஹான் ரத்வத்தைக்கு புதிய அமைச்சு Reviewed by Editor on March 10, 2022 Rating: 5