ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வி. பாபாகரன் அவர்களின் தலைமையில் மகளிர் தின நிகழ்வு நேற்று (08) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர்.தணிகாசலம் தர்ஷிகா அவர்களும், கௌரவ அதிதிகளாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் நிருவாக உத்தியோகத்தர், கிராம சேவகர் பிரிவின் நிருவாக உத்தியோகத்தர், திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், மேலதிக மாவட்ட பதிவாளர், அலுவலக உத்தியோகத்தர்கள், சிறுவர் , மகளிர் அமைப்பு சங்க உறுப்பினர்கள் மற்றும் தணிகாசலம் தர்ஷிகா அவர்களின் தாயாரும், தந்தையாரும் கலந்து கொண்டனர்.
"ஒரே நாடு ஒரே தேசம் ஒரே உலகம் அவளே" எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் நிலைபேறான எதிர்காலத்திற்கு பால்நிலை சமத்துவம் பேணப்பட வேண்டும் எனும் அடிப்படையில் பல்வேறு வகையான கலை நிகழ்வுகள் மற்றும் சிறப்பு பேச்சுகள் என பல மகளிர் தின கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.
மேலும், பிரதேச செயலாளர் அவர்களினால் மகளிர் தினம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துக்கள் தெளிவுபடுத்தப்பட்டதுடன், சிறப்பான முறையில் அதிதிகள் கௌரவிக்கப்பட்டு, மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.