நாளை (30) புதன்கிழமை மற்றும் நாளை மறுதினம் (31) வியாழக்கிழமை டீசல் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் திட்டமிட்டவாறு 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் வந்த கப்பலில் இருந்து இன்று (29) டீசலை இறக்கமுடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதோடு, இதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எவ்வித தட்டுப்பாடும் இன்றி பெற்றோல் விநியோகம் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவித்தல்
Reviewed by Editor
on
March 29, 2022
Rating:
