இறக்காமம் வைத்தியசாலைக்கு ஸ்கேனிங் மெசின் கையளிப்பு

இறக்காமம் பிரதேச வரலாற்றில் முதல் தடவையாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கான முதலாவது ஊடு கதிர் (Scanning Machine) இறக்காமம் பிரதேச வைத்தியசாலைக்கு இன்று (19) சனிக்கிழமை வழங்கப்பட்டது.

வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி திருமதி. மீனா சன்முகரத்தனம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஏ.ஆர்.எம்.தெளபீக் அவர்கள் பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதியாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களும், விசேட அதிதிகளாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹீர், மதகுருமார்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த ஸ்கேன் மெசினை எந்த ஒரு அரசியல் தலையீடும் இன்றி இறக்காமம் பிரதேசத்தில் உள்ள ஒரு பொது அமைப்பான கலாச்சார மறுமலர்ச்சி ஒன்றியத்தின் அயராது முயற்சியின் காரணமாக மெசின் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









இறக்காமம் வைத்தியசாலைக்கு ஸ்கேனிங் மெசின் கையளிப்பு இறக்காமம் வைத்தியசாலைக்கு ஸ்கேனிங் மெசின் கையளிப்பு Reviewed by Editor on March 19, 2022 Rating: 5