புனித ஜோசப் கல்லூரி கட்டிடத்தில் தீ பரவல்

மருதானை புனித ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (27) புதன்கிழமை தீ பரவியுள்ளது.

இத்தீயை அணைக்க பல தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு,    தீ விபத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




புனித ஜோசப் கல்லூரி கட்டிடத்தில் தீ பரவல் புனித ஜோசப் கல்லூரி கட்டிடத்தில் தீ பரவல் Reviewed by Editor on April 27, 2022 Rating: 5