‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ எனும் கொள்கைக்கு இணங்க, நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவத் தயாராக இருப்பதாக இந்திய வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் இந்தியா இலங்கைக்கு எரிபொருள் மற்றும் உணவுக்கான கடன் வசதிகள் உட்பட சுமார் 2.5 பில்லியன் டொலர் உதவியை வழங்கியுள்ளதாக அமைச் சின் பேச்சாளரான அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
270,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல், 40,000 மெட்ரிக் தொன் அரிசி என்பன இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரிசி, உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலம் அவற்றை விநியோகிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
Reviewed by Editor
on
April 08, 2022
Rating:
