இராஜாங்க அமைச்சரினால் வைத்தியசாலை கட்டிடத்திற்கான அடிக்கல்

வவுனியா பாவற்குளம் பகுதியில் இயங்கிவரும் பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியசாலை கட்டிடம் மற்றும் உபகரணங்களின் தேவைப்பாட்டை பூர்த்தி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் இராஜாங்க அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து குவைட் நாட்டின் நிதி உதவியுடன் ISRC தனியார் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வைத்தியசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் இன்று (30) சனிக்கிழமை கிராமிய பொருளாதாரப் பயிர்ச்செய்கை மற்றும் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் உத்தியோகப்பூர்வமாக நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ISRC தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் M. சயாப், முஸ்லிம் ஹேண்ட் (Muslim hand) நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப். மிஹ்லார் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் வைத்தியசாலை ஊழியர்கள், பொது மக்கள் எனப் பலரும்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





இராஜாங்க அமைச்சரினால் வைத்தியசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் இராஜாங்க அமைச்சரினால் வைத்தியசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் Reviewed by Editor on April 30, 2022 Rating: 5