காபந்து அரசில் அங்கம் வகிப்பதில்லை எனவும் அவசரகால சட்டத்தை எதிர்ப்பதெனவும் மக்கள் காங்கிரஸ் ஏகோபித்து முடிவு!

காபந்து அரசில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிராகரித்துள்ளது. கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் நேற்று இரவு (04) இடம்பெற்ற போதே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில், Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக, நேற்று இரவு (04) இடம்பெற்ற இந்த அவசர கூட்டத்துக்கு, கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமை வகித்தார்.

அரசாங்கம் விடுத்த அழைப்பை நிராகரிப்பதெனவும், பாராளுமன்றத்தில் இடம்பெறவிருக்கம் அவசரகால சட்டம் மீதான வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களிப்பதெனவும் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி குறித்தும், மக்களின் போராட்டங்கள் தொடர்பிலும் இங்கு நீண்ட நீரம் ஆராயப்பட்டது. 

நேற்றிரவு எடுக்கப்பட்ட தீர்மானங்கள், அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.


காபந்து அரசில் அங்கம் வகிப்பதில்லை எனவும் அவசரகால சட்டத்தை எதிர்ப்பதெனவும் மக்கள் காங்கிரஸ் ஏகோபித்து முடிவு!  காபந்து அரசில் அங்கம் வகிப்பதில்லை எனவும் அவசரகால சட்டத்தை எதிர்ப்பதெனவும் மக்கள் காங்கிரஸ் ஏகோபித்து முடிவு! Reviewed by Editor on April 05, 2022 Rating: 5