புதிய அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு பதவிகளை ஏற்காமல் பூரண ஆதரவை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இன்று (16) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பான வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களைச் கவர்ந்திழுக்க, கட்சியின் அடிப்படைக் கொள்கைக்குப் புறம்பாக ஆளும் கட்சிக்கு உறுப்பினர்களை உள்வாங்க முற்பட்டால் அதற்குரிய ஆதரவை இடைநிறுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
May 16, 2022
Rating:
