புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வாகனத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்றிரவு (04) பாலாவி-கற்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் அந்த காரில் பயணித்துள்ளதாக தெரியவருவதோடு, காரை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அலிசப்ரி ரஹீம் எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு நபரொருவர் மரணம்
 
        Reviewed by Editor
        on 
        
May 05, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
May 05, 2022
 
        Rating: 
 