ஆஸாத்சாலி பௌண்டேசனினால் மிக வறிய மக்களுக்கு பித்ரா உதவியாக அரிசி பொதிகள் திங்கட்கிழமை மாலை (02) வழங்கப்பட்டது.
அபிவிருத்தி உத்தியோகத்தரும் சமூக செயற்பாட்டாளருமான நியாஸ் இப்னுவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிண்ணியாவின் சில பிரதேசங்களில் இவ்வுதவி வழங்கப்பட்டது. மனியரசங்குளம் மாஞ்சோலைச்சேனை குட்டிக்கராச் ஆகிய பிரதேசங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கே இப்பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அதிதியாக திருகோணமலை மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.இர்பான், ஆசிரியர் எம்.ஆர்.எம்.பாயிஸ், ஊடகவியலாளர் இர்ஷாத் இமாமுத்தீன் ஆகியோரோடு இன்னும் பல முக்கியஸ்த்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஆஸாத் சாலி பௌண்டேசனால் வறிய மக்களுக்கு உதவி
Reviewed by Editor
on
May 03, 2022
Rating:
Reviewed by Editor
on
May 03, 2022
Rating:




