(இர்ஸாத் இமாமுதீன்)
சிறாஜியா அரபுக்கல்லூரிக்கு அல்ஹிக்மதுல் உம்மா பௌண்டேஷனினால் 7kw தர ஜெனெரேட்டர் திங்கட்கிழமை(23) வழங்கப்பட்டது.
அல்ஹிக்மத்துல் உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ் அவர்களினால் சிறாஜியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்ஹ் எ.எம்.எம்.நஸீர் அவர்களிடம் குறித்த ஜெனரேட்டர் கையளிக்கப்பட்டது.
சுமார் 200 க்கு மேற்பட்ட கிதாப் மற்றும் ஹிப்ழ் ஆண் மாணவர்களைக் கொண்ட சிறாஜியா அரபுக்கல்லூரி மாணவர்கள் மின்வெட்டுக் காலங்களில் கற்றல் நடவடிக்கைகளின்போது மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக சமூகசேவையாளரும் அல்ஹிக்மதுல் உம்மா பௌண்டேஷனின் தலைவருமான கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததிற்கினங்க சிறாஜியா அரபுக்கல்லூரியின் வேண்டுகோளை துரிதமாக நிறைவேற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
