(இர்ஷாத் இமாமுதீன்)
கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் கூடுகளில் கொடுவா மீன் வளர்ப்பதற்காக தெரிவு செய்யப்பட 12 பயனாளிகளுக்கு ரூபாய் 250,000 பெறுமதியான காசோலைகள் இராஜாங்க அமைச்சர் கபில நுவான் அதுகோரலவின் இணைப்பு செயலாளர் சல்மானுல் சப்ரியினால் இணைப்புச் செயலாளர் காரியாலயத்தில் வியாழக்கிழமை (05) வழங்கி வைக்கப்பட்டன.
சிறு ஏற்றுமதி தோட்ட பயிர் வளர்ச்சி இராஜாங்க அமைச்சர் கபில நுவான் அதுகோரல அவர்களுடைய முயற்சியால் National Home Gardening Program of strengthning Family Units by Improving Home Economic Nutrition- 2020/2021 என்ற செயற்திட்டத்தின் கீழ் இவ்வுதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் NAQDA பொறுப்பதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட கிராம சேவகர் பிரிவுகளினுடைய கிராம சேவகர்கள் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
May 07, 2022
Rating:


