மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கங்களை பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில் 100 மீட்டர் குறுந்தூர் ஓட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட பொத்துவில் அல்-கலாம் மகா வித்தியாலய மாணவன் ஜுனைதீன் ஆபித் ஹுசைன் மற்றும் 110M தடை தாண்டி ஓடும் போட்டியில் வெள்ளி பதக்கத்தினையும் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கத்தையும் வென்றெடுத்த இந்த பாடசாலையின் பழைய மாணவன்  அப்துல் கரீம் அமான் ஐசான்  இருவரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (10) திங்கட்கிழமை காலை பொத்துவில் பிரதேச சபை மற்றும் அல்-கலாம் பாடசாலையும் இணைந்து ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வுடன் இணைந்து ஊர்வலமும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களினால் பேண்ட் வாத்திய குழுவினரின் இசை முழங்க மாணவர்களின் அணி வகுப்புடன்  அழைத்து வரப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.எச்.அப்துல் ரஹீம் அவர்களும், கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலய உதவி கல்வி பணிப்பாளர் எம்.எம்.எஸ்.ஹக்கீம் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், விளையாட்டு கழகங்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தவிசாளர்,

இப்பாடசாலையில் அதிபர் எம்.எல். பிர்தௌஸ் அவர்களின் வருகைக்கு பிற்பாடு வரலாற்றில் இடம்பெறக்கூடிய நிகழ்வுகளில் ஒன்றாக இன்றைய தினம் கொண்டாடபடுவதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அதே போன்று மென்மேலும் இப்பாடசாலையின் பெயர் நாமம் எப்போதும் உச்சரிக்க படவேண்டும் அதற்கு அதிபர் ஆகிய உங்களின் ஒத்துழைப்பை எப்போதும் நான் எதிர் பார்க்கிறேன் என வேண்டிக்கொண்டார்.

இந்த பாடசாலைக்கென்று தனியான ஒரு மைதானமோ, அல்லது இந்த பொத்துவில் பிரதேசத்திற்கான ஒரு பொதுவான மைதானம் இல்லாத போதிலும் இந்த ஊரில் இருந்து இரண்டு தங்க மகன்கள் இந்த ஊருக்காக பெருமை சேர்த்து தந்திருக்கின்றதை நினைக்கின்ற பொழுது உண்மையிலே நான் அவர்களை பாராட்டுகின்றேன்.

இதற்காக ஊக்கப்படுத்திய விளையாட்டு ஆசிரியர்கள் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் இந்த வேலையில் நான் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றேன்.

இருந்தபோதிலும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு  அதற்காக எமது இந்த பிரதேசத்திற்கான ஒரு பொது மைதானம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக எமது  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் எம் முஷாரப், அதேபோன்று கௌரவ தவிசாளர் என்ற வகையில் நானும் அதேபோன்று பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்ணாஸ் என மூவரும் இணைந்து இந்த ஊருக்கான ஒரு பொது மைதானம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதை இந்த வேலையில் நான் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனவே இந்த மைதானத்தை பெற்றுக் கொள்வதற்காக இந்த பிரதேசத்தில் இருக்கின்ற அனைத்து இளைஞர்களும் விளையாட்டு கழகங்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு உங்களை அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.

அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வின் கதாநாயகர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்று முடிந்தது.





 

மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கங்களை பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கங்களை  பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு Reviewed by Editor on October 10, 2022 Rating: 5