(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக கல்முனை கல்வி, கலாச்சார மேம்பாட்டு தாபனம் (ECDO நூலகம்) இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
அதனடிப்படையில், நாளை (15) சனிக்கிழமை 452B பள்ளி ஒழுங்கை, கல்முனை -09 யில் அமைந்துள்ள ECDO நூலகத்தில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது.
மனித உயிர் காக்கும் இரத்தான முகாமில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன்வருமாறு அனைவரையும் ஏற்பாட்டு குழுவினர் அழைப்பதோடு,போக்குவரத்து சிரமமுள்ளவர்களுக்கு போக்குவரத்திற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
