மருந்துகளை வழங்கிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அக்கரைப்பற்று கிளை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை கிளையானது அதன் தொடர் மருந்துப்பொருள்களின் அன்பளிப்பின் ஓர் அம்சமாக வியாழக்கிழமை (10) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சில மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்றுக்கிளைத்தலைவர் சத்திர சிகிச்சை நிபுணர் றிப்சான் ஜெமீல் மற்றும் அதன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் போல் ரோஷான் மற்றும் தலைமை மருந்தகவியலாளர் திருமதி நாதிரா ஆகியோரிடம் இதனை கையளித்தனர்.




மருந்துகளை வழங்கிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அக்கரைப்பற்று கிளை மருந்துகளை வழங்கிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அக்கரைப்பற்று கிளை Reviewed by Editor on November 11, 2022 Rating: 5