கடவுச்சீட்டு கட்டணங்களில் மாற்றம் (விலை விபரம் உள்ளே)

இன்று வியாழக்கிழமை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கடவுச் சீட்டு கட்டணங்களையும் திருத்துவதற்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில்,  ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக்கட்டணம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாகவும், சாதாரண சேவை கட்டணத்தை 3,500 ரூபாவில் இருந்து 5000 ரூபாவாகவும் அதிகரிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதேபோல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 9,000 ரூபாவாகவும், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் சாதாரண சேவைக் கட்டணம் 2,500 ரூபாவில் இருந்து 3,000 ரூபாவாகும் அதிகரிக்கப்படவுள்ளது என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.





கடவுச்சீட்டு கட்டணங்களில் மாற்றம் (விலை விபரம் உள்ளே) கடவுச்சீட்டு கட்டணங்களில் மாற்றம் (விலை விபரம் உள்ளே) Reviewed by Editor on November 17, 2022 Rating: 5