அம்பாறை மாவட்ட விவசாய காணிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் - ஏ.எல்.எம்.அதாஉல்லா எம்.பி
அம்பாரை மாவட்ட விவசாயக் காணிகள் குறிப்பாக வட்டமடு விவசாயிகளின் காணிகள் யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், தற்போது சுற்றாடல் என்றும் வனபரிபாலன மற்றும் வன ஜீவராசிகள் என்றும் , முறையற்ற விதத்தில் காலத்திற்கு காலம் வர்த்தமானி வெளியிடப்பட்டு இன ரீதியாக தடுக்கப்பட்டதனால், அந்த விவசாயிகள் இன்று நடு வீதிக்கு வந்துள்ளனர் என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா நாடாளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்தார்.
நாட்டின் இன்றைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த காணிப்பிரச்சினைகள் அவசரமாக தீர்க்கப்பட வேண்டும். இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறைக்கு உடனடி தீர்வுகான முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
