(எம்.என்.எம்.அப்ராஸ், நூருல் ஹுதா உமர்)
கரவாகு கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் அக்குறனை அஸ்மியா நிஸாம் எழுதிய "மனிதம் இல்லா பூமி" கவிதை நூல் அறிமுக விழா மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் கரைவாகு கலை இலக்கிய மன்றத்தின் தலைவரும் ஊடகவியலாளரும் கலைஞருமான எஸ்.ஜனூஸ் தலைமையில் (12) சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நூல் அறிமுக நிகழ்வில் பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக சர்வதேச மாற்றத்திற்கான பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர் ரிஷாத் ஷரீப், அறிஞர் சித்திலெப்பை ஆய்வு மையத்தின் தலைவர் சட்டத்தரனி மர்சூம் மௌலானா, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா மற்றும் சிறப்பு அதிதியாக நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.நவாஸ், பாலமுனை ஹோமியோபதி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி முனீர் அபூபக்கர், மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம் அஸ்மி, மருதம் கலைக்கூடல் மன்ற தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ்.மௌலானா, சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவர் முனைமருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிம், துணிந்தெழு சஞ்சிகை நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.நஸ்றீன் பாஸித் உட்பட கலை, இலக்கிய அதிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நூலின் நயவுரையினை கவிதாயினி சித்தி மசூரா அவர்களும் நூல் பற்றிய விமர்சனத்தினை இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா அவர்களும் நூலின் வாழ்த்துரையினை சர்வதேச மாற்றத்திற்கான பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர் ரிஷாத் ஷரீப், அறிஞர் சித்தி லெப்பை ஆய்வு மையத்தின் தலைவர் சட்டத்தரனி மர்சூம் மௌலானா, சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவர் முனைமருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிம் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வுகள் மர்ஹூம் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் நினைவரங்கில் இடம்பெற்றதோடு, கண்டி மாவட்டம் அக்குறனையை சேர்ந்த அஸ்மியா நிஸாமின் முதலாவது வெளியீடு நூல் "மனிதம் இல்லாபூமி" என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
November 12, 2022
Rating:





