சவூதி அரேபியாவில் நிர்மாணத் துறையுடன் தொடர்புடைய பல தொழில் வாய்ப்புக்கள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய வேலைத்திட்டங்களில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தற்போது சவூதி அரேபியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டிருப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு முன்னர்,அந்நாட்டு பொறியியல் கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த துறைகளில் தொழில்களுக்கு செல்ல விரும்புபவர்கள் உரிய பதிவு சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
 
        Reviewed by Editor
        on 
        
November 16, 2022
 
        Rating: 
 