(றிஸ்வான் சாலிஹு)
தீகவாபி பிரதேசத்தில் உள்ள பௌத்த மதத்தை சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு புதிய நீர் இணைப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் ஐக்கியத்தை கட்டி எழுப்பும் நோக்குடன் அக்கரைப்பற்று கடற்கரை அந்-நூர் பள்ளிவாசல் தொண்டு அமைப்பினரின் ஊடாக நான்கு குடும்பங்களுக்கு புதிய நீர் இணைப்புக்கள் சனிக்கிழமை (17) பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முசாதீக் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதியினை சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளிலுள்ள அக்கரைப்பற்றைச் சேர்ந்த சகோதரர்கள் மற்றும் அட்டாளைச்சேனை நிதா பெளன்டேஷன் அமைப்பும் வழங்கி வைத்தது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சர்வமத குழுத் தலைவர் ஐ.எல்.ஹாசீம், தீகவாபி முதலாம் மற்றும் இரண்டாம் கிராம சேவகர் பிரிவின் கிராம உத்தியோகாதர்களான இரேசா அம்பகல, ஹிமாலி முத்துமெனிக்கே,
தீகவாபி முதலாம் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.றம்ஸி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சீ.ஏ.காதர் உட்பட பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.
