விடுமுறை தினமான இன்றைய (07) போயா தினத்தை முன்னிட்டு ஜனனம் அறக்கட்டளையின் அனுசரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டிலும் பகல் உணவு அன்னதானம் வழங்கி வைக்கும் நிகழ்வு கொழும்பு கொம்பனி தெரு கியூ வீதியில் அனுசன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.
இவ் அன்னதான நிகழ்வுக்கு ஜனனம் அறக்கட்டளையின் தலைவரும் IDM Nations Campus சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளருமான கலாநிதி வி.ஜனகன் அவர்கள் கலந்து கொண்டு அன்னதானங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளர் ஹிருனிக்கா, ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் பிரதி தவிசாளர்களில் ஒருவரான லக்சயன் முத்துக்குமாரசாமி மற்றும் பலரும் கலந்து கொண்டு அன்னதானங்களை வழங்கி வைத்தார்கள்.
Reviewed by Editor
on
December 07, 2022
Rating:

