அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக இறக்காமம் பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்!.
(Aroos Samsudeen)
அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான மீதான போலிக் குற்றச்சாட்டுக் கொண்ட அடிப்படையற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக இறக்காமம் பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.
இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் ஜே.கலீலூர் ஹஹ்மான் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட சபை அமர்வில் இக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதித் தவிசாளர் அஹமட் லெப்பை நௌபர் அவர்களினால் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானத்திற்கு சபையில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் உறுப்பினர்கள் ஏகமனதான ஆதரவை வழங்கினர்.
பிரதித் தவிசாளர் அஹமட் லெப்பை நௌபர் அவர்களினால் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானத்திற்கு சபையில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் உறுப்பினர்கள் ஏகமனதான ஆதரவை வழங்கினர்.
அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதீயுதீன் முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறுபட்ட பணிகளை செய்து வருவதாகவும், இன,மத, மொழி கடந்து நாட்டு மக்களுக்கு அவரின் சேவை கிடைத்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தங்களது உரைகளில் குறிப்பிட்டனர்.
இனவாத கடும் போக்காளர்கள் அரசியல் சூழ்ச்சியை மையப்படுத்தி அமைச்சர் ரிசாத்திற்கு எதிராக பொய்யான, அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை ஒருபோதும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. முஸ்லிம் சமூகத்திற்காக அவர் உரத்துக் குரல் கொடுப்பதை தடுப்பதற்காகவே இனவாதிகளும், இனவாத ஊடகங்களும் செயற்படுகின்றனர். என்று உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்.
இங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவை வழங்கினர்.
குறித்த கண்டனத் தீர்மானத்தை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்பினர்களுக்கும் எழுத்து மூலமாக அனுப்பிவைக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்காமம் பிரதேச பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கூட்டாட்சி நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக இறக்காமம் பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்!.
Reviewed by Editor
on
May 31, 2019
Rating:
