பொசன் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்...


எமது நாடு பல்லினத்தவர்களும் சமயத்தவர்களும் வாழும் ஒரு நாடு என்ற வகையில் பிற மத சகோதரர்களோடு நடந்துகொள்ள வேண்டிய ஒழுங்குகள் பற்றிய மார்க்க நிலைப்பாடுகளை நாம் அறிந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும்.

இந்தவகையில் எதிர்வரும் பொசன் பண்டிகைத் தினங்களில் கீழ்வரும் ஒழுங்குகளை கவனத்திற் கொள்ளுதல் வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாட்டு முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது.

1. நாட்டின் தற்போதைய நிலைமையைக் கவனத்திற் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மீளக் கட்டியெழுப்பும் ஒரு தருணமாக இந்த பொசன் காலப்பகுதியை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
2. இப்பண்டிகைக்கு இடையூறு இல்லாத வகையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதோடு மனிதாபிமான ரீதியில் அவர்களுடன் ஒத்துழைப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
3. பொசன் தினத்தில் ஆடு, மாடு, கோழி அறுப்பதற்கும், அவற்றை விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் தடை விதித்திருப்பதால் இவற்றை கட்டாயமாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பிற மதத்தவர்களின் மத உணர்வுகளை மதிப்பதாகவும் இது அமையும்.
4. இன நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புகின்ற எமது அனைத்து செயற்பாடுகளிலும் மார்க்க வரையறைகள் பேணப்படுவதை உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்;டும்.
5. இது தொடர்பான மேலதிக தெளிவுகளுக்கு ஜம்இய்யாவின் பத்வாப் பிரிவை தொடர்புகொள்ளுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது. 0117-490420
வஸ்ஸலாம்

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரச்சாரக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

பொசன் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்... பொசன் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்... Reviewed by Editor on June 14, 2019 Rating: 5