இன்று (14) ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈரான், ஈராக், லிபியா, குவைத், மலேசியா, ஓமன், பாகிஸ்தான், பலஸ்தீனம், கத்தார், சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களை சந்தித்து நாட்டு நிலமைகள் குறித்து கலந்துரையாடினர்.
அதன்போது இலங்கைக்குள் பல்லின மக்கள் வாழ்ந்த போதிலும் நாட்டில் ஒரு சட்டம் எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதை தாங்கள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மதரசா மற்றும் மத கல்வி பாடசாலைகள் அரசின் மேற்பார்வையில் நடைபெற வேண்டிய அவசியத்தை சுட்டிக் காட்டியதோடு, நாட்டில் ஊடகங்கள் வாயிலாக இடம்பெறும் வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
17 இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் சபாநாயகரை சந்தித்தனர்....
Reviewed by Editor
on
June 14, 2019
Rating:
