ஏவுகணை தாக்குதல் அபஹா விமான நிலையத்தில்!!!



சவுதி அரேபியாவின் அபஹா விமான நிலையத்தில் நேற்று மாலை (12) ஏவுகணைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களினாலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் தாக்குதலில் 26 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015–ம் ஆண்டில் தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னும் நீடித்து வருகிறது.

அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படைகள் களம் இறங்கி உள்ளன. இதன் காரணமாக  அவ்வப்போது சவுதி அரேபியாவை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்துவதும் உண்டு.

இந்த நிலையில், சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியான அபஹா நகரில் அமைந்துள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சற்றுமுன்னர் ஏவுகணைத் தாக்குதலை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏவுகணை தாக்குதல் அபஹா விமான நிலையத்தில்!!! ஏவுகணை தாக்குதல் அபஹா விமான நிலையத்தில்!!! Reviewed by Editor on June 13, 2019 Rating: 5