அரபுலக சுற்றுலா பயணிகளை கவரவே அரபு மொழி பெயர்ப்பலகை எழுதப்பட்டுள்ளது- முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
அரபு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலேயே கிழக்கில் பெயர்பலகைகளில் அரபு மொழி சேர்க்கப்பட்டது என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசேட நாடாளுமன்ற தெரிவு குழுவில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“அரபு மொழியை பயன்படுத்த வேண்டாமென சட்டம் இல்லை. காத்தான்குடியில் அரேபிய சுற்றலாப் பயணிகளை ஈர்க்கவே அரபு மொழிப் பெயர்களை பயன்படுத்தப்பட்டுள்ளது”
“எனக்கும் பயங்கரவாதி சஹ்ரானுக்கும் தொடர்பில்லை” – ஹிஸ்புல்லா சாட்சியம்!
தனக்கும் பயங்கரவாதி சஹ்ரானுக்கும் தொடர்பில்லை என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசேட நாடாளுமன்ற தெரிவு குழுவில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் 2015 காலப்பகுதியில் சஹ்ரானுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இருந்ததாகவும் நாடாளுன்றத் தெரிவுக்குழு முன் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா சாட்சியம் வழங்கியுள்ளார்.
2017 வரை ஷஹரான் காசீம் மதத் தலைவராகக் கருதப்பட்டார். இதன் பின்னர் அவர் ஐ.எஸ். அல்லது சில குழுவுடன் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களுக்கு தீவிரவாதத்தை பிரசங்கிக்க ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கும், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் பொலிஸார் அனுமதி கொடுத்திருந்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரபுலக சுற்றுலா பயணிகளை கவரவே அரபு மொழி பெயர்ப்பலகை எழுதப்பட்டுள்ளது- முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
Reviewed by Editor
on
June 13, 2019
Rating:
