இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ள இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பான – ஓ.ஐ.சி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுள்ளதுடன் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநியாயங்களுக்கு கவலையும் வெளியிட்டுள்ளது.
சவூதிஅரேபியாவின் மக்கா நகரில் இடம்பெற்ற இந்த அமைப்பின் 14ஆவது தேசிய மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும்- ஓ.ஐ.சி வேண்டுகோள்
Reviewed by Editor
on
June 04, 2019
Rating:
