புதிதாக உருவாக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa Campus)
அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட வேண்டும். மற்றும் கிழக்கு பல்கலைக் கழகத்திலுள்ள
மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்ததுக்கு முன்பாக இந்த
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாணவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தி
கோஷமிட்டவாறு வளாகத்திலிருந்து பேரணியாக வந்து வீதி ஓரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் களுவன்கேணி விடுதியிலுள்ள மாணவர்களுக்கான
போக்குவரத்துச்சேவை சீராக்கப்படுவதுடன் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.
மேலும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள வளாகத்தை அரசாங்கம் சுவீகரித்து அனைத்து இன மாணவர்களும் கல்வி பயிலுக்கூடிய மத சார்பற்ற பல்கலைக்கழகமாக இயங்கச் செய்யவேண்டும் ஆகியன ஆர்ப்பாட்டக்காரர்களது கோரிக்கைகளாகும்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்குமாறு ஆர்ப்பாட்டம்
Reviewed by Editor
on
June 04, 2019
Rating:
