எனது நிருவாக காலத்தில் எந்த இனமும் பாதிக்கப்படக்கூடாது- ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்


கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் நியமனங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் இன்று திருகோணமலையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கமைவாக முகாமைத்துவ உதவியாளர் நியமனம் ஏற்கனவே 189 பேருக்கு வழங்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் இந்நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என்ற நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமையவாக வழங்கப்பட்டபோது சிங்கள சகோதரர்கள் முற்றாக உள்வாங்கப்படாத நிலையில் இது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் சிங்கள பிரதேசங்களில் கடமையாற்றுவதற்காக சிங்கள மொழி மூலம் தெரிந்த உதவியாளர்கள் இல்லாத நிலையில் மாகாண நிருவாகத்தினை கொண்டு செல்வதில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையிலும் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் திறைசேரியோடும் மாகாண திறைசேரியோடும் கலந்துரையாடி மேலதிகமாக 60 நியமனங்களுக்கான அனுமதியையும் பெற்று மொத்தமாக 250 பேரளவில் இன்று நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டது.  
கிழக்கு மாகாணத்திலே நீண்டகாலமாக முகாமைத்துவ உதவியாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.
குறிப்பாக பிரதேச சபைகள், உள்ளூராட்சி சபைகள், மாகாண காரியாலயங்களில் முகாமைத்துவ உதவியாளர்கள் இல்லாமையினால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டி இருந்ததுடன் நிருவாக ரீதியான நடைமுறைச்சிக்கல்களும் காணப்பட்டது.
இதற்கமைவாக 250 நியமனங்களை வழங்கியதன் மூலமாக இன்று கிழக்கு மாகாணத்தினைச்சேர்ந்த 250 குடும்பங்களுக்கு வறுமை போக்கப்பட்டு ஔியூட்டப்பட்டிருக்கிறது.
எனவே இதற்காக நான் மிகவும் சந்தோசம் அடைவதுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் கலந்து கொண்டமையினால் இன்றைய நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போனாலும் நியமனங்களை பெற்றுக்கொண்ட அனைத்து முகாமைத்துவ உதவியாளர்களுக்கும் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள விஷேட செய்தியில் தெரிவித்துள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
எனது நிருவாக காலத்தில் எந்த இனமும் பாதிக்கப்படக்கூடாது- ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் எனது நிருவாக காலத்தில் எந்த இனமும் பாதிக்கப்படக்கூடாது- ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் Reviewed by Editor on June 02, 2019 Rating: 5