கடும் எச்சரிக்கை விடுத்து அமைச்சரவையில் இருந்து வெளியேறினார் ஜனாதிபதி!!!



அண்மைய தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக ரத்துச் செய்யாவிட்டால் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட பலரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிவருமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்து விட்டு அமைச்சரவை கூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியேறிவிட்டதாக அறியமுடிகின்றது.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவை கடுமையாக தாக்கிப் பேசிய ஜனாதிபதி , தெரிவுக்குழுவை ரத்துச் செய்வதா இல்லையா என்று அமைச்சரவை இன்று முடிவு செய்ய வேண்டுமெனவும் அல்லது தெரிவுக்குழு இரத்துச் செய்யப்படும்வரை அமைச்சரவை கூடாதென்றும் திட்டவட்டமாக தெரிவுத்துள்ளாரென அறியமுடிந்தது.
கடும் எச்சரிக்கை விடுத்து அமைச்சரவையில் இருந்து வெளியேறினார் ஜனாதிபதி!!! கடும் எச்சரிக்கை விடுத்து அமைச்சரவையில் இருந்து வெளியேறினார் ஜனாதிபதி!!! Reviewed by Editor on June 07, 2019 Rating: 5