திருக்கோயில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12பேர் காயம்!!!



திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி தங்கவேலாயுதபுரம் சந்தியில் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் பஸ்ஸுடன் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியதில் 12பேர் காயமடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவருவதாவது-

பொத்துவிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் தங்கவேலாயுதபுரம் சந்தியில் கருங்கள் ஏற்றிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கனரக வாகனத்தில் பின் பக்க சில் வெடித்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், பொத்துவிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து‌ அதனுடன் மோதி முன்பகுதி பாரிய சேதம் அடைந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளதோடு, விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை திருக்கோயில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருக்கோயில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12பேர் காயம்!!! திருக்கோயில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12பேர் காயம்!!! Reviewed by Editor on October 06, 2019 Rating: 5