மாகாண சபையின் கீழ் உள்ள 8 பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் தனது முகநூல் பக்கத்திலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதனடிப்படையில்-
1.குளியாப்பிட்டியவிலுள்ள சாரணாத் மஹா வித்தியாலயம்,
2.திம்புலாகல-விலயாய மத்திய மகா வித்தியாலயம்,
3.பொலன்னறுவை தோப்பாவேவ மகா வித்தியாலயம்,
4.திவுலங்கடவல மத்திய மகா வித்தியாலயம்,
5. பகமூன மஹாசொன் மகா வித்தியாலயம்,
6.பொலனறுவை முஸ்லிம் மத்திய கல்லூரி.
7. உஹன மகா வித்தியாலயம்
8. கம்பஹா ஹேனேகம மத்திய மகா வித்தியாலயம். ஆகிய பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதில் உடன்படாத கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் தமது மூன்று வருட சேவைக் காலத்திற்கு பிறகு மாகாண பொது சேவைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் கீழ் மாகாண பாடசாலைகள் 8 இணைகிறது
Reviewed by Editor
on
October 14, 2019
Rating:
Reviewed by Editor
on
October 14, 2019
Rating:
