ஜெமீல், உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரஸில் இணைகிறார்களா???



கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசஸில் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பகமான செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டு இவர்கள் இருவரும் தங்களுடைய தாய் வீடான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இனணந்து தங்களுடைய முழு ஆதரவினையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்போகின்றதோ அவர்களுக்கு ஆதரவை வழங்கி அவர்களின் வெற்றியின் பங்காளிகளாக இருக்கப் போவதாகவும் அந்த அரசியல் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் சேர்வது சம்பந்தமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், அமைச்சர் றிஷாட் பதியூதீன் அவர்களின் அமைச்சின் கீழ் இருந்த இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தவிசாளராக கடமையாற்றி, அதன் பின்னர் அந்த பதவியிலிருந்து இராஜினாமா செய்து அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இருந்தும் விலகி இருந்ததோடு, எம்.எஸ். உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் ஊடாக கிழக்கு மாகாண சபையில் பல அமைச்சுகளை வகித்ததோடு, அக்கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகவரி அல்லாதவர்களுக்கு முகவரியும், அடைக்களமும் கொடுத்து சமூகத்தில் அவர்களை அடையாளப்படுத்திய கட்சி என்றால் அது முஸ்லிம் காங்கிரஸ் என்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.








ஜெமீல், உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரஸில் இணைகிறார்களா??? ஜெமீல், உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரஸில் இணைகிறார்களா??? Reviewed by Editor on October 14, 2019 Rating: 5