(க.ஷியா)
ஒலுவில் வெளிச்ச வீட்டுச் சந்தியில் இன்று (11) வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
ஒலுவில் ஆறாம் குறிச்சியைச் சேர்ந்த கேப்பர் என்றழைக்கப்படும் 65 வயது மதிக்கத்தக்க ஆட்டோ சாரதியே குறித்த விபத்தில் மரணமடைந்தவராவார்.
இவர் பாதசாரிகள் இடம்மாறும் மஞ்சள் கடவையை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் மோதுண்டு ஸ்தலத்திலே மரணமடைந்தார்.
மேலதிக விசாரணைகளை
அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒலுவில் வாகன விபத்தில் ஒருவர் பலி
Reviewed by Editor
on
October 11, 2019
Rating:
Reviewed by Editor
on
October 11, 2019
Rating:
