பொதுஜன பெரமுன அமோக வெற்றி


இன்று (11) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றுள்ளது.

29 ஆசனங்களைக் கொண்ட எல்பிட்டிய பிரதேச சபையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களை பெறுவதற்கு 23,372 வாக்குகளை பெற்றுள்ளது.
எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சி 10,113 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5273 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2435 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

அதனடிப்படையில் எல்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுஜன பெரமுன அமோக வெற்றி பொதுஜன பெரமுன அமோக வெற்றி Reviewed by Editor on October 11, 2019 Rating: 5