ஆப்கானிஸ்தானில் ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டிருந்தார்கள் மீது துப்பாக்கி சூடு



(க.ஷியா)

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (18) தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் ஜூம்ஆ தொழுகையில் ஈடுப்பட்டிருந்த 70 ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான நன்கர்ஹார் (Nangarhar) மாநிலத்தில் உள்ள குக்கிராமம் ஜவ்தரா (Jawdara) ஜூம்ஆ மஸ்ஜிதில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் இந்த தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த தாக்குதல் சம்பந்தமாக, இதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்-

“முதலில் என் முகத்தில் அனல் மோதுவதை உணர்ந்தேன் பிறகு கட்டிடத்தின் கூரைகள் சரிந்த நிலையில் ‌நான் கதற ஆரம்பித்து விட்டேன், கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த என்னை பெண்களும் சில குழந்தைகளும் சேர்ந்து காப்பாற்றினர். இருந்தாலும், உடன்பிறந்த என் சகோதரன் ஒருவன் இறந்துவிட்டான் என அந்த பெண் தெரிவித்தார்.

இத்தாக்குதலில் 73பேர் உயிரிழந்ததுடன் குறைந்தது 40 ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 23‌ பேர் சிறுவர்கள் ஆவார்கள்.

உடல்களை அடக்கம் செய்த பொழுது மூன்று கல்லறைகளில் “அடையாளம் தெரியாத நபர்” என எழுதி வைத்துள்ளமை அந்த மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டிருந்தார்கள் மீது துப்பாக்கி சூடு ஆப்கானிஸ்தானில் ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டிருந்தார்கள் மீது துப்பாக்கி சூடு Reviewed by Editor on October 22, 2019 Rating: 5