(க.ஷியா)
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஜப்பான் நாட்டிற்கு இன்று (21) அதிகாலை திங்கட்கிழமை பயணமானார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இவர் அதிகாலை 01.10 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவரது பாரியார் உட்பட 21 பேர் கொண்ட குழுவுடன் டி.ஜி - 308 என்ற தாய் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புறப்பட்டு சென்றுள்ளார்.
ஜப்பான் நாட்டின் பேரரசராகிய நருஹிட்டோ முடி சூட்டும் விழாவில் கலந்து கொள்வதற்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் விஜயத்தை மேற்கொண்டுள்ளர்.
இந் முடிசூட்டும் நிகழ்வில் வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மற்றும் சவூதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் உட்பட பல நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இறுதி உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக இது அமையலாம் எனவும் நம்பப்படுகிறது.
ஜப்பான் சென்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
Reviewed by Editor
on
October 21, 2019
Rating:
Reviewed by Editor
on
October 21, 2019
Rating:
