ஜனாதிபதி சுற்றாடல் விருது தங்கப் பதக்கம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வசம்



ஜனாதிபதி சுற்றாடல் விருது- 2019ஆம் ஆண்டிற்கான தரப்படுத்தலில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தங்க விருதினையும், தேசிய பசுமை அறிக்கையில் முதலாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இவ்வாண்டின் (2019) ஜனாதிபதி சுற்றாடல் விருதிற்கான இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட தெரிவின் போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை இன்று (29) செவ்வாய்க்கிழமை கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்ட வைபவத்தில், ஜனாதிபதியிடமிருந்நு இந்த விருதினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர். ஐ.எம்.ஜவாஹீர் பெற்றுக் கொண்டார்.


இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார, சுற்றாடல் அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆதார வைத்தியசாலை ஒன்று ஜனாதிபதி சுற்றாடல் விருதின் தங்கப் பதக்கம் பெற்றது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதி சுற்றாடல் விருது தங்கப் பதக்கம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வசம் ஜனாதிபதி சுற்றாடல் விருது தங்கப் பதக்கம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வசம் Reviewed by Editor on October 29, 2019 Rating: 5