நாளை மறுதினம் (17) வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது இலங்கையின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையம்.
இன்று (15) புதிய விமானநிலையத்தில் முதல் விமானமாக இந்தியாவின் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் வெற்றிகரமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் "எயார் இந்திய எலைன்ஸ்" விமானம் பரீட்சித்தமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் வருகை தந்த அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம், விமான நிலையத்தின் தொழிநுட்பம் மற்றும் இதர செயற்பாடுகள் குறித்த அனைத்து பரிசோதனைகளையும் செய்து வருகின்றனர்.
இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, இந்திய நாட்டு பிரதிநிதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், விமான நிலைய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
இலங்கையின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்படுகிறது
Reviewed by Editor
on
October 15, 2019
Rating:
Reviewed by Editor
on
October 15, 2019
Rating:



