கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளராக டொக்டர் திருமதி ஷகீலா இஸ்ஸதீன் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய பணிப்பாளராக டொக்டர் திருமதி ஷகீலா இஸ்ஸதீன் இன்று (15) செவ்வாய்க்கிழமை கல்முனை காரியாலயத்தில் கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

வைத்தியர் திருமதி ஷகீலா இஸ்ஸதீன் வைத்திய அதிகாரியாகவும், வைத்திய அத்தியட்சகராகவும் பணி புரிந்த இவர் வைத்திய துறையில் மக்களுக்கு பல சேவைகளை ஆற்றியுள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக  கடமையாற்றிய டொக்டர் ஏ.எல்.அலாவுத்தீன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றமையினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே வைத்தியர் திருமதி இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளராக டொக்டர் திருமதி ஷகீலா இஸ்ஸதீன் நியமனம் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளராக டொக்டர் திருமதி ஷகீலா இஸ்ஸதீன் நியமனம் Reviewed by Editor on October 15, 2019 Rating: 5