இளம் எழுத்தாளர் அக்கரைப்பற்று ஏ.எம்.சாஜீத் அஹமட் எழுதிய "ஈஸ்டர் குருதிக் கசடும் மறுப்பும்" நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் (12) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஹல்லாஜ் தகவல் வள மைய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நூலின் பதிப்பகம் சார்பான உரையினை ஆசிரியர் ஏ.எம். அப்துல் றஸாக் நிகழ்த்த, பிரதியில் உள்ள மூன்று கட்டுரைகள் மீதான வாசிப்பினை இலக்கியவாதிகளான மன்சூர் ஏ. காதர் சேர், சுஹீரா, ஜெஸ்மி எம். மூஸா நிகழ்த்துவார்கள்.
நான்கு மதத் தலைவர்களும் கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வில், பிரதம அதிதி மற்றும் கெளரவ, விசேட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருமே என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
அனைத்து நண்பர்கள், அன்பர்கள் வாசகர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார் நிகழ்வின் கதாநாயகனும், நூலாசிரியருமான சாஜீத் அஹமட்.
எழுத்தாளர் சாஜித் அஹமட்டின் நூல் வெளியீட்டு விழா....
Reviewed by Editor
on
October 06, 2019
Rating:
Reviewed by Editor
on
October 06, 2019
Rating:
