சார்க் உயர் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவு சென்றுள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (09) அந்நாட்டின் உயர் கல்வி அமைச்சர் கலாநிதி இப்றாஹிம் ஹஸனை சந்தித்து கலந்துரையாடினார்.
Crossroads இல் நடைபெற்ற இச்சந்திப்பில் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வாவும் கலந்துகொண்டார்.
மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் தகுதியான மாலைதீவு மாணவர்களை இலங்கை பல்கலைக்கழங்களில் உள்ளீர்ப்பது குறித்தும், எதிர்காலத்தில் உயர் கல்வி துறையில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மாலைதீவு உயர்கல்வி அமைச்சருடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்
Reviewed by Editor
on
October 09, 2019
Rating:
Reviewed by Editor
on
October 09, 2019
Rating:

