(க.ஷியா)
சிலோன் மீடியா போறம் மற்றும் மாற்று கொள்கைகளுக்கான நிலையம் இணைந்து நடாத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான கருத்தரங்கு, சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (05) சனிக்கிழமை காலை 09 மணி தொடக்கம் நண்பகல் 01.30 வரை நடைபெற்றது.
வளவாளராக திரு. லயணன்குருகே கலந்து கொண்டு பல்வேறு தகவல்களை வழங்கினார்.
மேலும் அவர் தனது விரிவுரையின் போது-
எமது நாட்டில் நடைபெறும் அபிவிருத்திகள், மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு இருக்கிறதா இல்லையா என்பதை அறியும் முகமாக இந்திய பஞ்சாயத்து கிராமங்களில் வாழ் மக்களின் செயற்பாடுகளை உதாரணம் காட்டியும், இதனுடாக எமக்கான தகவல் அறியும் சட்டம் தெடர்பான முக்கியத்துவத்தையும் பயிற்று வித்தார்.
இறுதியாக அதிதிகளின் உரை மற்றும் நன்றியுரையும் இடம் பெற்றதோடு, செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஒரு நாள் செயலமர்வு
Reviewed by Editor
on
October 05, 2019
Rating:
Reviewed by Editor
on
October 05, 2019
Rating:



