ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (18) வெள்ளிக்கிழமை மாலை அக்கரைப்பற்றில் நடைபெற்றது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான கெளரவ ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அண்மையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இனணந்து கொண்டவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
SLMC இன் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டம் அக்கரைப்பற்றில் நடைபெற்றது
Reviewed by Editor
on
October 19, 2019
Rating:
Reviewed by Editor
on
October 19, 2019
Rating:
