சித்திர, கைப்பணி கண்காட்சி ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகிறது


(எமது செய்தியாளர் க.ஷியா)

ஒலுவில் அல்-ஹிரா பவுண்டேசன் நிறுவனத்தின் கீழ் உள்ள கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்காட்டும் முகமாக அந்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சித்திர மற்றும் கைப்பணி கண்காட்சி இன்று (19) சனிக்கிழமை தொடக்கம் நாளை (20) ஞாயிற்றுக்கிழமை வரை ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காட்சி மாலை 5மணி வரை பெண்கள் பார்வையிடும் நேரமாகவும், அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணி வரை ஆண்கள் பார்வையிட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் சென்று சின்னஞ் சிறு மாணவ செல்வங்களினால் படைக்கப்பட்ட ஆக்கத்தினை பார்த்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்தோஷமான இந்த கண்காட்சி நாளையும் ஒரு நாள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திர, கைப்பணி கண்காட்சி ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகிறது சித்திர, கைப்பணி கண்காட்சி ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகிறது Reviewed by Editor on October 19, 2019 Rating: 5