அக்கரைப்பற்றில் மொட்டு கட்சியின் பிரதான காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது


பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ஷ அவர்களின்  பொத்துவில் தொகுதிக்கான பிரதான தேர்தல் காரியாலயம் இன்று (01) வெள்ளிக்கிழமை மாலை அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களினால் வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் மாநகர சபை மேயர்,அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அக்கரைப்பற்றில் மொட்டு கட்சியின் பிரதான காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது அக்கரைப்பற்றில் மொட்டு கட்சியின் பிரதான காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது Reviewed by Editor on November 01, 2019 Rating: 5