(முஹம்மட் வாஜீத், க.ஷியா)
இன்று (31) காலை பாகிஸ்தானின் கராச்சி-ராவல்பிண்டி நகரில் ரயில் கடவையில் ஓடிக் கொண்டிருந்த ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்ததில் 68 பேர் பலியாகியுள்ளனர்.
காற்றின் வேகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ மிக வேகமாக அருகில் உள்ள பெட்டிகளுக்கும் பரவியது. தீப்பிடித்த பெட்டிகளில் இருந்த பயணிகள் பலர் உயிர் தப்புவதற்காக அலறியடித்துக்கொண்டு ஓடியதுடன், ரயிலில் இருந்து வெளியே பாய்ந்த சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ரயிலில் தீ பிடித்து 68 பேர் பலி! பாகிஸ்தானில் சம்பவம்
Reviewed by Editor
on
October 31, 2019
Rating:
Reviewed by Editor
on
October 31, 2019
Rating:

