கண்ணகிபுரம் பிரதேசத்தில் இளைஞரின் சடலம் மீட்பு



அக்கரைப்பற்று- கண்ணகிபுரம் பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று ‌(29) மீட்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று – சின்னபனங்காடு, புளியம்பத்தை பகுதியை சேர்ந்த 29 வயதான விநாயகமூர்த்தி தேவரூபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவர் இரண்டு நாட்களாக காணாமற்போயிருந்த நிலையிலே இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் சட்ட மருத்துவ பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணகிபுரம் பிரதேசத்தில் இளைஞரின் சடலம் மீட்பு கண்ணகிபுரம் பிரதேசத்தில் இளைஞரின் சடலம் மீட்பு Reviewed by Editor on November 29, 2019 Rating: 5